அவர் கடவுள்

who is heஅவர் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரன். அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” தேவன தம்முடைய குமாரனை குறித்து சாட்சி கூறும் வகையில் “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்றார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தேவதூதன் கன்னியாகிய மரியாளிடம் தோன்றி, “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” என்றான். அதற்கு மரியாள் “இது எப்படி ஆகும் புருஷனை அறியேனே” என்றாள். தேவதூதன் அவளுக்கு பிரதியுத்தரமாக “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவரின் பலம் உன்மேல் நிழலிடும்; அதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமரன் எனப்படும்” என்றான். கிறிஸ்துவின் பிறப்பு இதில் தனித்துவம் நிறைந்ததாகும். தேவதூதனால் உரைக்கப்பட்டது போல அவள் ஒரு குமாரனை பெற்றாள். அவருக்கு இயேசு என்று பேரிட்டாள். அவரே உலகத்தின் இரட்சகர்.

வாழ்வு மற்றும் போதனைகள்

life and teachingsஇயேசு தமது முப்பதாம் வயதில் தேவன் அவருக்கு கொடுத்த ஊழியத்தினை செய்ய ஆரம்பித்தார். நற்செய்தியை பிரசங்கித்தார்; வியாதியஸ்தரை குணமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினார். ஊமையர்கள் பேசுவதையும் முடவர்கள் நடப்பதையும் பார்வையற்றோர் காண்பதையும் கண்ட மக்கள் ஆச்சர்யப் பட்டார்கள். அவரது போதனைகள் தனித்துவம் வாய்ந்ததும் அதிகாரமுள்ளதுமாய் இருந்தன. அவர் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.” என்று போதித்தார். அவரை மக்கள் பலர் பின்பற்ற ஆரம்பித்ததால் மத குருக்களும், ஆளுநர்களும் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரை ஒழித்திட வேண்டுமென திட்டம் தீட்டினர். அனால் இயேசு தாமே தாம் அவர்களால் அனுபவிக்க போகும் பாடுகளை குறித்தும் தமது மரணத்தை குறித்தும் மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழப் போவதைக் குறித்தும் முன்னறிவித்தார்.

மரணமும் உயிர்தெழுதலும்

death and resurrectionஇயேசு கைது செய்யப்பட்டு பிரதான ஆசாரியரிடம் கொண்டு செல்லப்பட்டார். அவரை கொலை செய்யும்படி பொய் சாட்சிகள் தேடினார்கள். அனால் அவருக்கு விரோதமான எந்த குற்றமும் நிருபிக்கபடவில்லை. இறுதியில் அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று கூறிக் கொள்கிறார் என குற்றம் சாட்டப்பட்டு மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப் பட்டார். அவரை சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பினார்கள், அவர் தாம் முன் குறித்த படியே ரோம ஆளுனரால் மரணதிற்குட்பட்டார். அவர் நினைத்திருந்தால் தன்னை அவர்களிடம் இருந்து விடுவித்திருக்க முடியும். ஆனால் அவரோ நமது பாவங்கள் மன்னிக்கப்பட தன்னை மரணத்திற்கு ஒப்புகொடுத்தார். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்…” அவர் சிலுவையில் மரித்து பின்னர் அடக்கம் பண்ணப் பட்டார். ஆயினும் தாம் முன் குறித்தப்படியே மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். பின்பு பலமுறை அவரது சீடர்களுக்கு காட்சியளித்தார். குறித்த காலத்தில் பரலோகத்திற்கு ஏறி தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

அவரது அன்பை பெற்றுக் கொள்ளுங்கள்

receive his loveநாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம். இயேசு நம் அனைவருக்காகவும் ஒரே பாவ நிவாரண பலியாக மரித்தார். அவரே பரலோகத்திற்கு செல்லும் ஒரே வழி ஆவார். அவராலே அல்லாமல் யாரும் பிதாவினிடத்தில் சேர முடியாது. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. வேறு எவராலும் நம்மை பாவத்திலிருந்து மீட்க இயலாது. அவராலேயன்றி இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அவரது அன்பின் பரிசை பெற்றுக் கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. இயேசு சிலுவையில் உங்கள் பாவ நிவாரண பலியை செலுத்தி விட்டார். நீங்கள் உங்கள் பாவ நிலையை உணர்ந்து மனம்திரும்பி கிறிஸ்து இயேசு உங்கள் பாவ நிவாரண பலியை சிலுவையில் செலுத்தி விட்டார் என்று விசுவாசித்தால் இரட்சிக்க படுவீர்கள். கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?

[button link=”https://www.myjourneywithjesus.com/yes” text=”ஆம், நான் ஜெபித்தேன்” title=”ஆம்” color=”orange” size=”medium”]

[button link=”https://www.myjourneywithjesus.com/no” text=”இல்லை, சில கேள்விகள்” title=”இல்லை” color=”orange” size=”medium”]